கிரான் பிரதேசத்தின் ஆற்றில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழப்பு

56

-ருத்ரா-

கோரவெளி கிராமசேவகர் பிரிவின் ஆயிலடிச்சேனை கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் நேற்று மாலை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நாகராசா கரிசனன் வயது (14) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

நேற்று மாலை 2.30 மணியளவில் நண்பருடன் தோணியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது தோணி காற்றின் வேகம் காரணமாக ஆற்றின் நடுப்பகுதியினை சென்றடைந்துள்ளது.

இதனையடுத்து கரையில் நின்ற நண்பனின் உதவியினை நாடிய நிலையில்  கரையில் நின்ற நண்பர்கள் தோணியின் கயிற்றினை இழத்து கட்ட முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை என சம்பவத்துடன் தொடர்புபட்ட அவரது நண்பன ஜெ.சிந்துஜன் தெரிவித்துள்ளார்.

இறுதியில் அயலவர்களின் உதவியினை நாடிய நிலையில் குறித்த சிறுவன் ஆற்றில் வீழ்ந்துள்ளான். காப்பாற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்ததுள்ளதை அடுத்து நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.