நாட்டில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களுக்கான விலைகள் அதிகரிப்பு !

328

எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இலங்கை பெற்றோலிய வளக்கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

92 ஒக்டேன் ரக ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 157 ரூபாவாகும். 95 ஒக்டேன் ரக ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 23 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, புதிய விலை 184 ரூபாவாகும். ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை 7 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, புதிய விலை 77 ரூபாவாகும் ஒரு லீற்றர் டீசலின் விலை 7 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி புதிய விலை 111 ரூபாவாகும். ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 12 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது .இதன்படி புதிய விலை 144 ரூபாவாகும்.