நாட்டில் பயணத்தடை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பு !

300

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னதாக எதிர்வரும் 14ஆம் திகதி பயணத்தடை தளர்த்தப்படும் என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நாட்டின் கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இவ்வாறு பயணத்தடையை நீட்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.