பயணத்தடையை 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகிவரும் தகவலானது உண்மைக்கு புறம்பானது !

50

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பயணத்தடையை 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகிவரும் தகவலானது உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அமுலில் உள்ள எதிர்வரும் 14ஆம் திகதிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.