கசிப்பு உற்பத்தியின் போது பெரல் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

205

– க.சரவணன்-

அம்பாரை சம்மாந்துறை வளத்தாப்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட போது கசிப்பு பெரல் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த ஏகாம்பரம் தங்கவேல் (வயது-56) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்திலுள்ள வாய்க்கால் கரையில் தந்தையும் மகனும் மற்றும் உறவினர் ஒருவர் உட்பட 3 பேர் சம்பவதினமான இன்று வியாழக்கிழமை அதிகாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெரல் வெடித்து சிதறியதையடுத்து தீபரவல் காரணமாக சம்பவ இடத்தில் இவர் இறந்துள்ளார். தொடர்ந்து சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ள நிலையில் வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக தீயிட்டதாக தெரிவித்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு குறித்த நபர் தலைமறைவாகியுள்ளார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.