மட்டக்களப்பில் பிரித்தானிய புதிய கொரோனா வைரஸ் தொற்றுடன் ஒருவர் !

953

-க.சரவணன்-

மட்டக்களப்பில் கொரோனா தொற்று பரிசோதிப்பதற்காக எடுக்கப்பட்ட மாதியிரியை போதனா வைத்தியசாலையில் உள்ள ஆய்வு கூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்காக அனுப்பட்டதில் ஒன்றினை எதேச்சையாக பரிசோதனை மேற்கொண்டபோது அதில் வீரியம் கூடிய திரிவுபட்ட யு.கே பி.117 அல்பா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நுண்உயிரியல்துறை விசேட வைத்திய நிபுணர் பி. தேவகாந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய திரிவுபடுத்தப்பட்ட வைரஸ் தொற்று தொடர்பாக நுண்உயிரியல்துறை விசேட வைத்திய நிபுணர் பி. தேவகாந்தனை இன்று வியாழக்கிழமை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.