தொழில் நிமிர்த்தம் நந்தி கடலுக்கு சென்ற குடும்பஸ்தர் மாயம்

73

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் கடல் தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வீடு திரும்பாத நிலையில் குறித்த நபர் காணாமல்போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனந்தபுரம் பகுதியினை சேர்ந்த 44 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான வேலு கணேஸ் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனந்தபுரம் கிராமத்தினை சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் நந்திக்கடலில் மீன்பிடிப்பதற்காக நேற்று புதன்கிழமை இரவு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

இந் நிலையில் இன்று நண்பகலாகியும் வீடு திரும்பாத நிலையில் நந்திக்கடலில் தொழில் செய்யும் பகுதிக்கு சென்று தேடியும் காணாத நிலையில் அவரது குடும்பத்தினரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.