நாட்டில் இதுவரை தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தோர் 182,238 ஆக அதிகரிப்பு

86

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,811 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரை தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 182,238 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் தொற்றுக்கு இலக்காகியுள்ளவர்களின் எண்ணிக்கை 213,396 ஆக அதிகரித்துள்ளது.மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,910 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.