கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 32 வயதுடைய நபர் கைது

129

-பதுளை நிருபர்-

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீதும்பிடி குடுகல்பத்தன பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 32 வயதுடைய நபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன ஆலோசனையில் உப பொலிஸ் பரிசோதகர் சுனில் தலைமையிலான குழுவினர் இக் கசிப்பு உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைத்த நிலையில் குறித்த நபர் கைது செய்ததோடு கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்த பட்ட சில உபகரணங்களுடன் 120000 மில்லி லீட்டர் கோடாவும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபரை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.