நாட்டு கோழி வளர்ப்பில் மாதம் 50000 ஆயிரம் வரை நிச்சயம் சம்பாதிக்கலாம்

1592

நாட்டு கோழி வளர்ப்பு நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில் என்பது இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் பிராய்லர் கோழியின் இறைச்சி மற்றும் கோழி முட்டை சாப்பிட்டால் எந்த ஒரு பலனும் இல்லை என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டு விட்டது. இதனால் அதிகப்படியான மக்கள் நாட்டுக்கோழி முட்டைகள் மற்றும் நாட்டுக்கோழி இறைச்சியில் அதிகபடியாக தேடுகின்றனர்.

ஏனெனில் தூய நாட்டு கோழி முட்டை மற்றும் இறைச்சிகள் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளது. நாட்டுக் கோழி இறைச்சி மற்றும் முட்டை அதிகப்படியான புரதச் சத்துக்கள் மற்றும் பல மருத்துவ குணங்களை நிறைந்துள்ளதால் மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர் அதுமட்டுமின்றி நாட்டுக் கோழியின் இறைச்சி பிராய்லர் கோழியின் இறைச்சியை விட சுவை அதிகமாக காணப்படும்.

நாட்டுக்கோழி வளர்ப்பது எப்படி நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில் என்பது இன்றைய காலகட்டத்தில் பல்வேறு மொழிகளில் வளர்க்கப்படுகின்றன 1. மேய்ச்சல் முறை 2. கூண்டு முறை 3. கொட்டகையில் அடைத்து வைத்து வளர்ப்பு முறை இது போன்று பல்வேறு முறைகளில் இன்றைய காலகட்டத்தில் நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில் என்பது மற்ற தொழிலில் இப்போது நாம் சாதாரணமாக நினைக்கக்கூடாது. ஏனெனில் நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில் பல இடர்ப்பாடுகள் வரக்கூடும் எனவே நாம் முதலில் நாட்டுக்கோழி வளர்ப்பை விருப்பப்பட்டால் முதலில் ஒரு 5 கோழிகளை நாம் வாங்கி அதனை வெற்றிகரமாக வளர்த்து குஞ்சுகளைப் பெற வேண்டும். நாம் இவற்றை வெற்றிகரமாக செய்து விட்டாலே நாம அடுத்த நிலைக்கு நாம் முன்னேறி விடலாம். எப்படி வளர்த்தால் லாபம் பெற முடியும் நாம் மேற் சொன்ன மூன்று முறைகளில் முதல் முறை தேர்வு செய்தால் மட்டுமே நம்மால் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஒரு கணிசமான லாபத்தை பெற முடியும் அதாவது மேய்ச்சல் முறை. நம் நாட்டுக் கோழி வளர்ப்பில் அதிகப்படியான லாபம் ஈட்டுவதற்கு நமக்கு மேய்ச்சல் முறையில் மிகவும் சிறந்தது.ஏனெனில் மேய்ச்சல் முறையில் அதிகப்படியான தீவனங்கள் நமக்கு ஆகாது தீவனச் செலவில் மிகவும் குறைவாக இருக்கும். அதுமட்டுமன்றி கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகமாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி கோழிகளின் இறைச்சி மற்றும் முட்டையின் சுவை அதிகமாக இருக்கும்.மற்ற இரண்டு முறைகளிலும் செலவினங்கள் அதிகமாக இருக்கும் நம்மால் அதிகப்படியான லாபங்களை பெறுவதில் சற்று சிக்கலாக இருக்கும். கூண்டு முறை மற்றும் கொட்டகை முறையில் நாம் அடைத்து வைத்து வளர்ப்பதால் அதிகப்படியான தீவனங்கள் செலவாகும் எனவே நாட்டுக்கோழி வளர்ப்பிற்கு மேய்ச்சல் முறை மிகவும் சிறந்தது. மாதம் 50000 சம்பாதிக்க முடியுமா? நாட்டுக்கோழி வளர்ப்பில் மாதம் 50 ஆயிரம் சம்பாதிக்கலாம். இதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. முட்டையாக விற்பனை செய்தல் ஒருநாள் குஞ்சுகளை விற்பனை செய்தல் ஒரு மாத குஞ்சுகளாக விற்பனை செய்தல் தாய் கோழிகளை விற்பனை செய்தல்

மேற்சொன்ன நான்கு முறைகள் நமக்கு அதிகப்படியான லாபத்தை தருவது முட்டை மற்றும் குஞ்சுகளாக விற்பனை செய்தல் ஆகும். நான் மாதம் 50,000 ரூபாய் வரை சம்பாதிக்க வேண்டும் என்றால் நம்மிடம் குறைந்தபட்சம் 1000 தாய் கோழிகள் ஆவது இருக்க வேண்டும். ஏனென்றால் நம்மிடம் இருக்கும் அனைத்துக் கோழிகளும் முட்டைகள் வைக்காது.நம்மிடம் இருக்கும் ஆயிரம் தாய் கோழிகளில் 250 கோழிகள் முட்டை வைக்கும் மீதமிருக்கும் 250 கோழிகள் அடைபட்டு இருக்கும். அடுத்தபடியாக மீதமிருக்கும் 250 கோழிகள் குஞ்சுகள் வைத்திருக்கும். அடுத்தபடியாக மீதமிருக்கும் 250 கோழிகள் அடை தெளிந்த நிலையில் முட்டையிடுவதற்கு தயார் நிலையில் இருக்கும்.

ஆயிரம் கோழிகள் தோராயமாக நாள் ஒன்றுக்கு 200 முட்டைகள் வைக்கும்.நாம் ஒரு முட்டையின் விலை 10 ரூபாய் என்ற விதத்தில் விற்றால் கூட நமக்கு 2000 வரை நாளொன்றுக்கு நமக்கு கிடைக்கும். மாதம் 60,000 ரூபாய் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.கோழிகளுக்கு தீவன செலவு பத்தாயிரம் ரூபாய என்று வைத்துக் கொள்வோம். நமக்கு மீதம் 50 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். நான் மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது நமக்கு தீவனச்செலவு பத்தாயிரம் ரூபாய் வரை செலவு ஆகாது.எனவே நம் நாட்டுக் கோழிகள் மேய்ச்சல் முறையில் வளர்த்தால் கண்டிப்பாக மாதம் ஐம்பதாயிரம் வரை தாரமாக லாபம் பெற முடியும். கோழி வளர்க்க அனுபவம் மிகவும் முக்கியம் நாட்டுக்கோழி வளர்க்க ஆர்வம் உள்ள நண்பர்கள் முதலில் முறையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டுக்கோழி வளர்ப்பு தொழிலில் நமக்கு முறையான அனுபவம் இருந்தால் மட்டுமே நம்மால் வெற்றிபெற முடியும்.நாட்டுக்கோழி வளர்ப்புக்கு இலவசமாக தமிழக அரசின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.அனுபவமில்லாத நண்பர்கள் அந்த பயிற்சியை எடுத்துக் கொண்டு நாட்டுக்கோழி வளர்ப்பில் இறங்கினால் நிச்சயம் வெற்றி காண முடியும். இல்லையெனில் முதலில் 10 கோழிகளை வாங்கி வளர்த்து அதில் உள்ள லாப நஷ்டங்கள் மற்றும் நோய் தாக்கங்கள் இவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு நாம் அதிகப்படியாக கோழிகளை வளர்க்கலாம். நாம் எடுத்த உடனே அதிகபடியான கோழிகளை வாங்கி வளர்த்து நஷ்டம் அடைவதை விடகுறைந்த எண்ணிக்கையிலான கோழிகளை வாங்கி அவற்றை வெற்றிகரமாக வளர்த்து பிறகு நாம் அதிகபடியான கோழிகளை வளர்க்க வேண்டும்.ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் நாம் முறையான பயிற்சிகளை மேற்கொண்டு நாட்டுக்கோழிகளை வளர்த்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். நன்றி