வவுனியா நகரப் பகுதிகளைச் சேர்ந்த மேலும் நால்வருக்கு கொரோனா

33

வவுனியா நகரப் பகுதிகளைச் சேர்ந்த மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா, பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் ஒருபகுதி முடிவுகள் இன்று (சனிக்கிழமை) காலை வெளியாகியுள்ள நிலையில், வவுனியா மற்றும் குருமன்காடு பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வவுனியா நகர கொரோனா கொத்தணியில் இதுவரை 175 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.