மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – ஒருவர் உயிரிழப்பு

993

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் எறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு பிசிஆர் அன்டிஜன் பரிசோதனையில் புதிதாக கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் 440 ஆக அதிகரித்துள்ளதுடன் 5 உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொண்டுவரும் எழுந்தமானமாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்த நிலையில் மட்டக்களப்பு சுகாதாரப் பிரிவுகளில் ஒருவருக்கும் காத்தான்குடி சுகாதார பிரிவில் 4 பேருக்கும், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்10 பேர் உட்பட 15 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 215 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளதுடன் 222 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றதுடன் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே நாளாந்தம் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளைப் பேணி அவதானமாக நடந்து கொள்ளுமாறு அவர் தெரிவித்தார்.