இலங்கையில் உள்ள சிறைகளில் உள்ள நெரிசலை குறைப்பதற்காக கடந்த டிசம்பர் முதலாம் திகதி முதல் இன்று சனிக்கிழமை வரை 12,339 சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர் சந்தனா ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை விடுவிக்கப்பட்டவர்களில் 1,100 ஆண் கைதிகளும் மற்றும் 26 பெண் கைதிகளும் உள்ளனர்.
மேலும் கடந்த 45 நாட்களில் 10,832 ஆண் கைதிகளும் மற்றும் 371 பெண் கைதிகளும் சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைதிகள் அனைவரும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே விடுவிக்கப்பட்டுள்ளனர் என சந்தனா ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 தொற்று சூழ்நிலைகள் காரணமாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மன்னிப்பு வழங்கக்கூடிய கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.