மட்டக்களப்பு நகரில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழப்பு! குறித்த பகுதி தனிமைப்படுத்தி முடக்கம்

1889

மட்டக்களப்பு  மாநகரசபை பொதுச் சந்தைக்கு அருகிலுள்ள மூர் வீதியில் மாரடைப்பினால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு  இறந்த 79 வயதுடைய முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளமை இன்று சனிக்கிழமை  கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த பகுதி முடக்கப்பட்டு, வீதிகள் யாவும் மூடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

குறித்த நபர் சுகயீனம் காரணமாக வீட்டில் இருந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார் இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து குறித்த நபரின் சடலம்  வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவதற்கான நடவடிக்கையினை பொது சுகாதார ஊழியர்கள் மேற்கொண்டுவருவதுடன் குறித்தபகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலத்திற்கு இறுஅஞ்சலி செலுத்த சென்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.