இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 51,596 ஆக அதிகரிப்பு

16

இலங்கையில் இன்று சனிக்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 695 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 51,596 ஆக அதிகரித்துள்ளது என கோவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் (நோப்கோ) தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 8 பேர் வெளிநாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள் என்றும்,
4 பேர் நாட்டிற்கு வந்த வெளிநாட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் கம்பாஹா மாவட்டத்தைச் சேர்ந்த 168 பேர், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 147 பேர், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 90 பேர் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 278 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை மினுவாங்கோடை மற்றும் பெலியகோடை மீன் சந்தைக் கிளஸ்டருடன் தொடர்புடைய பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,788 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் மொத்தம் 41,501 பேர் முழுமையான குணமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும் 15,146 பி.சி.ஆர் சோதனைகள் நேற்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டதாகவும் நோப்கோ தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நான்கு கொரோனா வைரஸ் இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது.