இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி போடும் பணியை பிரதமர் தொடங்கி வைத்தார்

95

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் முதற்கட்டமாக சுகாதார, மருத்துவ, முன்கள ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பவுள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் மற்றும் காந்திநகரில் உள்ள அரசு மருத்துவமனைகளின் மருத்துவ கண்காணிப்பாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை முதலில் பெற்றுக் கொள்கின்றார்கள்.

முதல் நாளான இன்று 16,000 க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படுகின்றது.

ஆமதாபாத் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் வைத்தியர் ஜே வி மோடி (வயது-46) காந்திநகர் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் வைத்தியர் நியாதி லக்கானி (வயது-58) ஆகியோருக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.