வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 206 பேர் நாடு திரும்பினர்!

17

கொரோனா அச்சுறுத்தலினால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 206 இலங்கையர்கள் இன்று வியாழக்கிழமை நாடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய தென் கொரியாவிலிருந்து 95 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 66 பேரும், கட்டாரலிருந்து 45 பேரும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அழைத்தும் செல்லப்பட்டுள்ளனர்.