பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து பிள்ளையான் விடுதலை

33

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவரும் சுமார் 5 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து கடந்த நவம்பர் 24ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வழக்கில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோரே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.