உக்ரைனில் இருந்து மேலும் 165 சுற்றுலாப் பயணிகள் வருகை

58

உக்ரைன் நாட்டிலிருந்து மேலும் 165 சுற்றுலாப் பயணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டை வந்தடைந்தனர்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக அவர்கள் நாட்டிற்குள் அழைத்துவரப்பட்டனர் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 180 சுற்றுலாப்பயணிகளுடன் இலங்கைக்கான முதல் உக்ரேனிய பயணிகள் விமானம் டிசம்பர் 28ஆம் திகதி மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியிருந்தது.

அவர்களில் இதுவரையில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.