மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா தொற்று

575

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் தேவையின்றி வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு இன்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற்று ஊடக சந்திப்பில் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கணேசலிங்கம் கலாறஞ்சினி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அட்டானைச்சேனை, அக்கரைப்பற்று, கல்முனைதெற்கு, சாய்ந்தமருது, உகன ஆகிய ஆறு வலயங்கள் சிவப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் கொரோனா தொற்றுள்ள நோயாளிகள் அதிகரித்து காணப்படுகின்றது.

இதுவரை 425 தொற்றாளர்கள் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டதில் 80 பேருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளதுடன் 3 இறப்பு ஏற்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை 10 கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்க ப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வைத்தியசாலையில் கடமையாற்றும் 21 ஊழியர்களுக்கு தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது ஊழியர்களுக்கு தொற்று ஏற்படும் போது வைத்தியசாலை நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு ஆளணி பற்றாக்குறை ஏற்படலாம்.

இதனை தவிர்ப்பதற்காகவும் நோயாளியில் இருந்து ஊழியர்களுக்கும் ,ஊழியர்களில் இருந்து நோயாளிகளுக்கும் தொற்று பரவலை தடுப்பதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

அதேவேளை தொற்றா நோயான சக்கரைவியாதி, இதயநோய், சிறுநீரகநோய், புற்றுநோய், மற்றும் வயோதிபர்கள் போன்றோருக்கு இது அதிகூடிய பாதிப்பை ஏற்படுத்துவதால் இவ்வாறனவர்கள் வைத்தியசாலைக்கு கிளினிக் வருவதை தவிர்த்து கிராமசேவகர் ஊடாக தபால் மூலமாக மருந்துக்களை பெற்றுக் கொள்ள முடியும்.

இதற்கான தொலைபேசி எண்களான 065 3133330, 065 3133331 என்ற தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கிளினிக்குரிய மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியும் வைத்தியசாலைக்கு அவசியம் ஏற்படும் போது நோயாளிகள் வருவதுடன் முடிந்தளவு தங்களுக்கு அருகாமையிலுள்ள வைத்திசாலைக்கு சென்று சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

அதேவேளை நோயாளர்களை பார்வையிட ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதும் தற்போது உள்ள நிலமை காரணமாக நோயாளர்களை பார்வையிடும் நேரத்தை குறைத்து 15 நிமிடம் வரை பார்வையிட்டு செல்வது சிறப்பானதாகும்.

நோயாளிகளுக்கு உதவியாக வருபவர்கள் தேவை ஏற்படும் போது மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் இருந்தும் நோயாளிக்கோ,பொதுமக்களுகோ தேவையான அவசியமான தேவைகளை நாங்கள் வழங்கிவருகின்றோம்.

அம்பாறை , திருகோணமலை , மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களான கிழக்கு மாகாணத்தில் 40 ஆயிரம் பேருக்கு இதுவரை பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதனை பரிசோதனை செய்யும் இடம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மட்டும்தான் எனதெரிவித்தார்.