நாட்டில் நேற்று மாத்திரம் 582 பேர் கொரோனா தொற்று !

101

இலங்கைக்குள் நேற்று மாத்திரம் 582 பேர் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர்.

முன்னதாகவே நேற்று மாலை 414 பேர் தொற்றாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இதில் 62 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும்,352 பேர் ஏற்கனவே கண்டறியப்பட்ட தொற்றாளிகளின் இணைப்புக்களில் இருந்தும் கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து 10.30 மணியளவில் மேலும் 168 பேர் தொற்றாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதில் 53 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும், 115 பேர் கடற்றொழில் சமூகங்களில் இருந்தும் கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் மினுவாங்கொட மற்றும் பேலியகொட தொற்று மற்றும் அதன் இணைப்புக்களில் இருந்து கண்டறியப்பட்ட தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 6727 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 9717ஆக உயர்ந்துள்ளது.

5630 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். 4142பேர் தொற்றில் இருந்து இதுவரை குணமாகியுள்ளனர்.