கிளிநொச்சியில் 77.300 கிலோகிராம எடையுடைய கேரளா கஞ்சா மீட்பு-

11

கிளிநொச்சியில் 77.300 கிலோகிராம எடையுடைய கேரளா கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தேடி, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கு அமைய, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பிரதி பொலிஸ்மா அதிபர் சம்பத் குமார லியககேவின் உத்தரவிற்கு அமைவாக, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சந்திரசேகரவின் கண்காணிப்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் புஸ்பகுமார மற்றும் கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜீவகஸ்த சிறிசேன ஆகியோரின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இவை மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி ஊடாக வேறு பகுதிகளிற்கு கடத்தப்படுவதற்காக எடுத்துவரப்பட்ட சந்தர்ப்பத்திலேயே பொலிஸார் சுற்றவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், 77.300 கிலோ கிராம் கஞ்சா, இரண்டு கையடக்க தொலைபேசிகள், படகு மற்றும் 40 கோஸ் பவர் கொண்ட இயந்திரம் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், சான்று பொருட்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.