ஆறாவதாக பிறக்கப் போவது ஆணா ? பெண்ணா ? என பார்ப்பதற்கு கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கிழித்த கொடூரம் !

214

-ச.சந்திரபிரகாஷ்-

ஐந்து மகள்களைப் பெற்ற தந்தை ஒருவர் ஆறாவதாக பிறக்கப்போவது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை பார்ப்பதற்காக தனது கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கூர்மையான ஆயுதம் கொண்டு திறந்ததாகக் கூறப்படும் ஒரு பயங்கரமான திலூட்டும் சம்பவம் இந்தியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வடக்கு மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் உள்ள நெக்பூர் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

ஆறாவதாக பிறக்கப்போவது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என பதற்றமடைந்த நிலையில் தனது 35 வயதான மனைவியின் வயிற்றை கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதத்தால் திறந்து பார்க்க முற்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் கர்ப்பிணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆறு மாதங்களுக்கும் மேலாக கர்ப்பமாக இருந்த குறித்த பெண் நேர்ந்த திலூட்டும் சம்பவத்தால் கலக்கமடைந்த குடும்ப உறுப்பினர்களால் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணின் கணவர் பிறக்கப் போவது ஆணா அல்லது பெண்ணா என்பதை அறிய விரும்பியதால் தான் இவ்வாறான ஒரு செயலைச் செய்ததாகக் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் மற்றும் இவருடைய இச் செயலுக்கான வேறு பின்னணி , அவரது நோக்கங்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

கொடூரமான தாக்குதலுக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணின் நிலை குறித்தும் குழந்தையின் நிலை குறித்தும் செய்தி வெளியிடும் நேரம் வரை தெரியவரவில்லை.