அமெரிக்காவில் இருந்து 18 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

143

அமெரிக்காவில் விசா இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த 18 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில் காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அமெரிக்கhவில் விசா சட்ட விதிமுறைகளை மீறியதற்காக இந்த 18 பேரும் சட்ட அமலாக்க அதிகாரிகளால் அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் வாஷிங்டனில் இருந்து கென்யாவின் நைரோபிக்கு அமெரிக்க விமானத்தின் மூலம் அழைத்து வரப்பட்ட நிலையில் சனிக்கிழமை இரவு கென்ய ஏர்லைன்ஸ் விமானத்தில் நாடு திரும்பி உள்ளனர்.

18 பேரும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுடைய தனிமைப்படுத்தல் முடிவடைந்த பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவர் தொடர்பான அறிக்கைகளை பதிவு செய்வார்கள் என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.