கொழும்பில் வைத்து “பரெல் ரஞ்சி” கைது

58

போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பரெல் ரஞ்சி’ என அழைக்கப்படும் மொஹமட் ஃபாரூக் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் இன்று காலை 6 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கொழும்பு கிரண்ட்பாஸ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 7 கிராம் ஹெரோயின், 21 கையடக்க தொலைபேசிகள், மடிக்கனணி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபருடன் 31 வயதான யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த யுவதியிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.