நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டுவந்த முக்கிய சூத்திரதாரி உட்பட மூவர் கைது

95

சிலாபம்  ,மராவிலா மற்றும் முண்டலம  பகுதிகளில் நீண்ட காலமாக இடம்பெற்று வந்த பெரிய அளவிலான நில அபகரிப்பு மோசடி தொடர்பாக முக்கிய சூத்திரதாரி உட்பட மூன்று சந்தேக நபர்கள் சிலாபம் சிறப்பு குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியான அடையாள அட்டை மற்றும் காணி பத்திரத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் முக்கிய இரு சந்தேக நபர் டான்கோட்டுவ புத்கம்பால மற்றும் மொருகுலியா ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசடியில் ஈடுபட்ட தரகர் மராவிலாவிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் இவர்கள் அனைவரும் இன்று மராவில மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் கிடைக்கப் பெற்ற புகாரைத் தொடர்ந்து சிலாபம் சிறப்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளத் தொடங்கினார்கள்.

மராவில பகுதியில் உள்ள ஒரு பெண் தனது நிலத்தை ஒரு தனிநபரால் தனக்கு விற்றுவிட்டதாகக் கூறி வலுக்கட்டாயமாக காணிக்குள் உள்நுழைந்ததாக பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இரண்டு மில்லியன் ரூபாக்கு விற்கப்பட்ட குறித்த காணி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட போது மோசடி தொடர்பாக பல விடயங்கள் தெரியவந்துள்ளது.

புத்தம்போல மற்றும் மராவிலவில் வசிக்கும் பிரதான சந்தேகநபர் மற்றும் ஒரு தரகர் புத்தளம் மாவட்டத்திலும் இதேபோன்ற பல நில மோசடிகள் தொடர்பாக பொலிஸாரால் தோடப்பட்டு வந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் சந்தேக நபர்கள் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடி செய்ததாகக் தெரியவருகின்றது.

சந்தேக நபர்கள் பல்வேறு முகவரிகளில் வசித்து வந்ததாகவும், அவர்களின் தொலைபேசி பதிவுகளை ஆய்வு செய்த பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.