கடலாமை இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட  நால்வர் கைது!

10

தடை செய்யப்பட்ட கடலாமை இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட  நால்வர், யாழ்ப்பாணம்- குருநகர், அண்ணாசிலை பகுதியிலுள்ள வீடு ஒன்றில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, யாழ்ப்பாணம்- குருநகர் பகுதியில் வீடு ஒன்றினை அவர்கள் சோதனையிட்டனர்.

இதன்போது நான்கு கடல் ஆமைகள், இறைச்சிக்காக வெட்டப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில்,  அந்த வீட்டில் இருந்த குருநகர் பகுதியை சேர்ந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 4 கடல் ஆமையின் பாகங்களும் விற்பனைக்கு தயாராக இருந்த இறைச்சியையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள், விசேட அதிரடிப்படையினரால் யாழ்ப்பாணம் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளார்கள்.