வீட்டின் மீது இடிந்து விழுந்த 5 மாடிக் கட்டடம் – குழந்தை உள்ளிட்ட மூவர் மீட்பு !

8

கண்டி – பூவெலிகட பகுதியில் 5 மாடிக் கட்டடமொன்று வீட்டின் மீது இடிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில்  குழந்தை உட்பட 5 பேர் மண்ணுக்குள்குள் சிக்குண்ட நிலையில் அவர்களில் இருவர் முதலில் மீட்கப்பட்டனர்  அதனைத்தொடர்ந்து படையினரின் முயற்சியில் குழந்தையும் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் ஒரு தம்பதியை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த கட்டடம் மண் தாழிறக்கத்தால் முற்றாக மண்ணால் புதையுண்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நாட்டில் நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நுவரெலியா, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ள