மட்டக்களப்பு நகரில் வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து சிசு சடலம் மீட்பு

1248

மட்டக்காப்பு பொலிஸ் பிரிவிலுள்ள வன்னியாஸ் வீதியில் 42 நாள் பெண் குழந்தை வீட்டுக் கிணத்திலிருந்து இன்று செல்வாய்கிழமை ள்15 திகதி இரவு மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

பிறந்து நாற்பது இரண்டு நாள் கொண்ட பெண் பிள்ளையான கோஷனி என்ற சிசுவே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் சம்பவ தினமான இன்று செவ்வாய்க்கிழமை வழமைபோல கணவன் வேலைக்கு சென்றிருந்த நிலையில் உறவினர்களுடன் வீட்டில் சிசுவுடன் தாய் இருந்துள்ளதாகவும் மாலை 5.30 மணியளவில் உறவினர்கள் கோவிலுக்கு சென்றிருந்த நிலையில் குழந்தையுடன் தனிமையில் இருந்ததாகவும் அப்போது குழந்தையை வீட்டின் அறையில் கட்டிலில் படுக்கவைத்துவிட்டு வீட்டின் கதவை சாத்திவிட்டு மலசல கூடத்துக்கு சென்று திரும்பி வந்தபோது கட்டிலில் படுக்கவைத்த குழந்தை காணாமல் போயுள்ளதாகவும் 
இதனையடுத்து குழந்தையை வீடுமுழுவது தேடிய நிலையில் கணவர் மற்றும் உறவினர்களுக்கு இத தொடர்பாக தெரியபடுத்திய பின்னர் அவர்களளம் தேடிய நிலையில் வீட்டின் முன்பகுதில் அமைந்திருந்த கிணற்றில்  உயிரிழந்த நிலையல் இருப்பதை கண்டுள்ளதாக  பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது 

இதனையடுத்து தடையவியல் பிரிவு மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை பிரேத பரிசோனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

மேற்படி சம்பவம் அப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு பொலிஸார் மரணம் தொடர்பான விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றது குறிப்பிடத்தக்கது.