மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் தேர்த் திருவிழா!

86

ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு திருச்செந்தூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று 15 செவ்வாய் கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.

ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இன்று 4.00 மாலை மணியளவில் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இந்தியாவின் திருச்செந்தூர் ஆலயத்தினை நோக்கியதாக கடல் அலையின் ஆனந்தத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 07 ஆம் திகதி ஆரம்பமானது.

ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் இன்று பிற்பகல் ஆலயத்தில் தம்ப பூஜை நடைபெற்று முருகப்பெருமான் உள்வீதியுலா இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து இடம்பெற்ற விஷேட பூஜைகளையடுத்து தேர்த் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது.

நாட்டின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர். இதேவேளை, நாளை தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.